![]() | நடனம் நிச்சயமாக முந்தைய மனித நாகரீகங்கள் பிறப்பதற்கு முன்னர் இருந்தே விழாக்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு என்பவற்றில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. புதைபொருள் ஆராய்ச்சி புள்ளிவிவரங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்த நடன தடயங்கள் அதாவது இந்திய மற்றும் எகிப்திய கலைகளில் உள்ள 9,000 ஆண்டு பழைய வாய்ந்த பீம்பெட்கா(Bhimbetka) பாறைகளில் உள்ள ஓவியங்கள் போன்ற தடயங்களை வழங்குகிறது. எழுதப்பட்ட ஆவணங்கள் தோன்றுவதற்கு முன்னர் நடனம் சந்ததிக்கு சந்ததி புராணக் கதைகளை (Myths) கடத்தும் ஒரு முறையாக இருந்துள்ளது. இன்னொரு வகையில் ஆரம்ப காலங்களில் நடனமானது பல சடங்குகளில் அனைவரையும் பரவசப்படுத்தி ஒற்றுமைப்படுத்தும் ஓர் முன்னோடியாக இருந்துள்ளது. பிரேசிலிய மழைக்காடுகளில் (Brazilian rainforest) இருந்து கலாஹரி பாலைவனம் (Kalahari desert) வரையில் உள்ள பல பண்பாடுகளால் மேற்கூறிய தேவைக்காக இன்றும் நடனம் பயன்படுத்தப்படுகின்றது. |
இலங்கை நடனங்கள் பழங்குடியினர் yingyang இரட்டையர்கள் மற்றும் "yakkas" (Devils) என்ற புராண முறை சார்ந்தவை. ஒரு சிங்களம் புராணத்தின் படி, Kandyan நடனங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாய சடங்கில் இருந்து தொடங்கியது.பல சமகால நடன வடிவங்கள் வரலாற்று, மரபு, சடங்கு, மற்றும் பாரம்பரிய நடனங்கள் என்பவற்றின் அடையாளமாக காணப்படுகின்றன. . | |
மன்னார் மாவட்டத்தில் பரதநாட்டியம், கதகளி, மோகினியாட்டம், கதக் ஆகிய நடன முறைகள் காணப்படுகின்றன. இவற்றில் பரதநாட்டியமே பெரும்பாலானோரால் பயிலப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக அனுமதி பெரும் மாணவர்கள் பல்கலைக்கழகத்திலே கதகளி நடன முறையைப் பயிலும் வாய்ப்பை பெறுகின்றனர். இதன் காரணமாக மன்னார் மாவட்டத்திலும் கதகளி நடனம் அறிந்த சிலர் காணப்படுகின்றனர். ஏனைய இரு நடன முறைகளையும் மிகச் சிலரே அறிந்துள்ளனர். இவர்கள் அயல் நாடுகளுக்கு சென்று இந்நடன முறைகளை அறிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது | ![]() |
Postgraduate Courses in Sri Lanka | Classical Dance In Sri Lanka | Dep.Dance University of Jaffna | Classical Dance In India |
hai natpu eanga unga photo va kanala?
ReplyDelete